அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் குழந்தை உட்பட 4 பேர் பலி..!

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் குழந்தை உட்பட 4 பேர் பலியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அங்குள்ள லேக்லேண்டில் இருக்கும் இரண்டு வீடுகளில் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியதில் கைக்குழந்தை உட்பட 4 பேர் இறந்துள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள 11 வயது சிறுமியை மீண்டும் பலமுறை சுட்டு கொன்றதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றுள்ளது. இதனையடுத்து காவல்துறையுடன் நடைபெற்ற மோதலில் ஒருவர், இந்த இடத்தில் நடந்த தவறை ஒப்புக்கொண்டு சரணடைந்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் காவல்துறையினருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025