பிரேசில் நாட்டில் கொரோனா சிகிச்சை அளிக்கக் கூடிய நெஸ்டர் பைவா எனும் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதுவரை கிட்டத்தட்ட 17 கோடிபேர் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், உலகின் பல நாடுகளிலும் தற்போது கொரோனா பாதிப்புகளும் உயிரிழப்பும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையிலும் பிரேசிலில் இதுவரை 1.63 கோடி பேருக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 4.59 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவிலான மொத்த உயிரிழப்பில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் பிரேசில் தான் காணப்படுகிறது. பிரேசிலில் உள்ள கிழக்கு மாநிலத்தில் உள்ள நெஸ்டர் பைவா எனும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடிய மருத்துவமனையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 77 வயது மூதாட்டி உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட பொழுது அந்த மருத்துவமனையில் 60 நோயாளிகள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்று இதுவரை கண்டறியப்படவில்லை.
சென்னை : வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர் பகுதியில் உள்ள திமுக எம்பி கதிர் ஆனந்த் வீட்டிலும், திமுக நிர்வாகி…
சென்னை : கேரளாவில் இருந்து கோவைக்கு 18 டன் சமையல் எரிவாயுவை ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று கோவை…
கொச்சி : கேரளா மாநிலம் கொச்சியில் பாலாரிவட்டம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கலூர் மைதானத்தில் நடிகை திவ்யா உன்னி…
கோவை : கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து கோவைக்கு சமையல் எரிவாயு எடுத்து வந்த டேங்கர் லாரியானது கோவை அவினாசி…
சென்னை : ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கும்.…
சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில்…