ரஷ்யாவில் பெண்ணின் வயிற்றிலிருந்து 4 அடி நீளமுள்ள பாம்பை மருத்துவர்கள் எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ரஷ்யாவை அடுத்த தகெஸ்தானில் உள்ள லெவாஷி என்ற கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது வீட்டின் வெளியே உள்ள முற்றத்தில் படுத்து தூங்கியுள்ளார். அடுத்த நாள் காலையில் அவருக்கு குமட்டல், வயிறு வலி மற்றும் வயிற்றில் ஏதோ ஊர்வதை போன்று உணர்ந்த அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்குள்ள மருத்துவர்கள் அவரது வயிற்றில் ஏதோ உள்ளதை புரிந்து கொண்டு மயக்க மருந்து கொடுத்து விட்டு, அவரது வாயில் எண்டோஸ்கோபி என்ற கருவியை பயன்படுத்தி வயிற்றுக்குள் தேடினர்.
அப்போது. எண்டோஸ்கோபி கருவியுடன் ஒட்டிக் கொண்டு 4 அடி நீளமுள்ள பாம்பும் வெளி வந்தது. அதனை கண்ட மருத்துவர் பதறி அடித்து விலகினார். இதுகுறித்த, வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. பெண்ணின் வயிற்றில் இருந்த பாம்பு இப்போது உயிருடன் இருக்கிறதா என்பதை குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. அவர், வசிக்கும் கிராமத்தில் இவ்வாறு நிகழ்வது சகஜம். எனினும், பெண்ணின் வயிற்றில் 4 அடி நீளமுள்ள பாம்பு இருந்த சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையொட்டி அப்பகுதி மக்களை திறந்தவெளி பகுதிகளில் படுக்க வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளனர்.
சென்னை : தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார் ஏ.ஆர்.ரகுமான். இவரது இசைக்கு மொழிகள் கடந்து உலகம்…
சென்னை : இன்று தமிழ் மாதம் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு தினமாகவும் பலரால் கொண்டாடப்படுகிறது. சித்திரை முதல்…
டெல்லி : நேற்றைய (ஏப்ரல் 13) ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடின. இப்போட்டி…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…