ஐசிசி தரவரிசையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு 4-வது இடம்…!
ஐசிசி தரவரிசையில் 113 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கூடுதலாக மூன்று புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.
ஐசிசி தரவரிசையில் 113 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கூடுதலாக மூன்று புள்ளிகளைப் பெற்று தற்போது முதல் முறையாக 116 புள்ளிகளுடன் தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது..
இதுகுறித்து இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ், “தரவரிசையில் 3-வது இடத்துக்கு முன்னேறுவதே அணியின் தற்போதைய நோக்கம்.
உலகக் கோப்பை போட்டி உள்பட, கடந்த ஓராண்டாக அணியின் சிறப்பான செயல்பாடு காரணமாகவே இந்தப் புள்ளிகளைப் பெற்றுள்ளோம்.
அடுத்த போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணிக்கு இது மிகப்பெரிய ஊக்குவிப்பாக இருக்கும்” என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
அணிகளுக்கான ஐசிசி தரவரிசையில் இங்கிலாந்து 128 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியா அதே புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளது.
நியூசிலாந்து 118 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.
இந்தியா 4-வது இடத்திலும், மேற்கிந்தியத் தீவுகள் 5-வது இடத்தில் உள்ளன.