ஜம்மு-காஷ்மீரில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.!
கத்ரா, ஜம்மு-காஷ்மீருக்கு கிழக்கே 84 கி.மீ தூரத்தில் ரிக்டர் அளவில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.
நேற்று காலை கத்ரா, ஜம்மு-காஷ்மீருக்கு கிழக்கே 84 கி.மீ தூரத்தில் ரிக்டர் அளவில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இதுவரை, எந்தவொரு உயிர் இழப்பு மற்றும் சேதங்கள் பற்றிய எந்த தகவலும் வெளிவரவில்லை. கடந்த இரண்டு மாதங்களில், நாடு முழுவதும் லேசான நிலநடுக்கம் அதிர்வெண் கடுமையாக அதிகரித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில், கடந்த மாதத்தில் 3 குறைந்த தீவிர அதிர்வலைகள் காணப்பட்டது. ஜூன் 16 அன்று, இரண்டு லேசான நிலநடுக்கங்கள் ஒரே நாளில் யூனியன் பிரதேசத்தை உலுக்கியது.