கடந்த 24-ஆம் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டதை அடுத்து தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ரஷ்ய படைகள் உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளது. உக்ரைன் மீது படையெடுப்பு நடத்திய ரஷ்யா, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தீவிர தாக்குதலில் ஈடுபட்டது. உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை கைப்பற்றிய ரஷ்ய படைகள், கிழக்கு பகுதியில் உள்ள நகரங்களை கைப்பற்றவும் தீவிரம் காட்டி வருகிறது.
இதனிடையே, ரஷியா உக்ரைன் உடனான போரை கை விட்டு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் உக்ரைன் எல்லையில் இருக்கும் ரஷ்ய நட்பு நாடான பெலாரஸில் இரு கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில், முக்கிய நகரங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற, பாதுகாப்பான வழித்தடங்களை உருவாக்குவது மற்றும் அவை உருவாக்கப்படும் பகுதிகளில் உள்ளூர் போர் நிறுத்தங்களைக் கடைபிடிப்பது குறித்து ரஷியாவும் உக்ரைனும் தற்காலிக உடன்பாட்டை எட்டின.
அதன்படி, உக்ரைனில் உள்ள கீவ் , கார்கிவ், சுமி, மரியபோல், வோல்நோவாக்கா ஆகிய நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா நேற்று அறிவித்திருந்தது. இந்த நிலையில், தற்போது உக்ரைன் – ரஷ்யா இடையே 3-ஆம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…