நவராத்திரியின் 3-வது ,4-வது நாட்கள் ..!எடுத்துக்கொள்ள வேண்டிய பிரசாதம் என்ன..!
நவராத்திரி நவக்கிரகங்களை போன்றே 9 நாட்கள் வருவதால் இவை இரண்டின் பலன்களைக் கருதி வழிபட வேண்டும்.அதில் 3-வது ,4-வது நாட்கள் என்ன பிரசாதம் எடுக்க வேண்டும் என்பதை காண்போம் .
நவராத்திரி மூன்றாம் நாள்:
சர்க்கரைப் பொங்கலை பிரசதமாக செய்து வழிபடுவதால் தானிய விருத்தி உண்டாகும். வாழ்வு சிறப்படையும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.
நவராத்திரி நான்காம் நாள்:
பலவிதக் காய்களும், பருப்பும் கலந்த கதம்ப சாதத்தை பிரசாதமாக செய்து வழிபடுவதால் பகை விலகும். எதிர்ப்புகள் அகலும். இன்னல்கள் தீர்ந்து இன்பம் சேரும்.