#Justnow:அதிகாலை 3 மணி;விமானப்படையின் விமானம் – இலங்கையை விட்டு தப்பிச் சென்றார் கோத்தபய ராஜபக்சே!

Default Image

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில்,பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.குறிப்பாக,நாட்டின் நிலைமைக்கு பொறுப்பேற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி,பொதுமக்களோடு எதிர்க்கட்சியினர்,கிரிக்கெட் வீரர்கள்,பொதுமக்கள் உள்ளிடோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால்,மக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த இலங்கையில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.எனினும்,தடைகளை மீறி கொழும்புவில் உள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகையை இரு தினங்களுக்கு முன்னர் முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மாளிகையை கைப்பற்றினர்.

இந்த பரபரப்பான சூழலில்,இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே,அரசு மாளிகையில் இருந்து தப்பியோடி ராணுவ தலைமையகத்திற்கு சென்றுள்ளார் எனத் தகவல் வெளியாகியது.மேலும்,அவர் கப்பல் மூலமாக வெளிநாடு தப்பிச் சென்றதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியது.ஆனால்,அதிபர் மாளிகையில் இருந்து தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே எங்கு இருக்கிறார் என்பது குறித்த தகவல் இதுவரை தெரிவிக்கப்படாமல் இருந்தது.

இதனைத் தொடர்ந்து,கொழும்பு ரத்மலானை விமானப்படை தளத்தில் கோத்தபய ராஜபக்சே தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியது. இதனிடையே,இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என இலங்கை பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.இதனையடுத்து,கோத்தபய ராஜபக்சே,பதவி விலகல் கடிதத்தில் நேற்று கையெழுத்திட்டார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில்,இன்று முறைப்படி பதவி விலகுவதாக கூறிய நிலையில், கோத்தபய ராஜபக்சே தனது மனைவியுடன் மாலத்தீவுக்கு தப்பிச் சென்றடைந்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு தலைநகர் மாலே பகுதியை இன்று அதிகாலை 3 மணியளவில் சென்றடைந்துள்ளார் என சர்வதேச நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து,அங்கிருந்து வேறு ஆசிய நாட்டிற்கு அவர் செல்வார் என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.மேலும்,அவரது சகோதரரும்,முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்சேவும் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested