காஞ்சனா 3 : சன் பிக்சர்ஸ் தயாரிப்பு : லாரன்ஸ் அதிரடி
லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘காஞ்சனா 3’ படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
‘முனி’, ‘காஞ்சனா’, ‘காஞ்சனா 2’ ஆகிய பேய் படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் வசூலை அள்ளியவர் இயக்குநர் லாரன்ஸ். தானே அப்படங்களில் நாயகனாக நடித்து, பேய் படங்களை மக்கள் ரசிக்கும்படி எடுத்து பெயர் பெற்றவர்.
தற்போது ‘காஞ்சனா 3’ மூலம் தயாராகிவிட்டார் லாரன்ஸ். இதிலும் தானே நடித்து, இயக்க முடிவு செய்துள்ளார். 3 நாயகிகள் இதற்காக ஒப்பந்தம் செய்யப்படவுள்ளார்கள். கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். நாயகிக்கு வேதிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.
ராஜமெளலியின் உதவி இயக்குநர் மகாதேவன் இயக்கவுள்ள படத்தில் ஒப்பந்தமானார் லாரன்ஸ். ஆனால், அப்படத்தின் முதற்கட்ட பணிகளை முடிக்க நீண்ட காலமாகும் என்பதால், அதற்குள் ‘காஞ்சனா 3’ படத்தை முடித்துவிட முடிவு செய்திருக்கிறார் லாரன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.