பெண் மர்ம மரணம்: கணவர் உள்பட 3 பேரை காவல் துறையினர் விசாரணை!

Default Image
மன்னார்குடி அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கணவர் உள்பட 3 பேரையும் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா அலுவலக சாலையை சேர்ந்த முத்தழகன் மகன் இளஞ்சேரன் (வயது 32). இவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் டர்கடராக பணியாற்றி வருகிறார். இளஞ்சேரனுக்கும் மன்னார்குடியை அடுத்த சேரன் குளம் கிராம நிர்வாக அலுவலர் கார்த்தியேன் என்பவர் மகள் திவ்யா (25) என்பவருக்கும் கடந்த 3½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு முத்து கிருஷ்ணன் என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த 18-ம் தேதி திவ்யா தனது கணவர் வீட்டில் காயங்களுடன் மயங்கி கிடந்தார். அவரை மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் திவ்யா இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து திவ்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக திவ்யாவின் கணவர் டாக்டர் இளஞ்சேரன், மாமனார் முத்தழகன், மாமியார் ராணி ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
இந்நிலையில் 3 பேரிடம் போலீஸ் காவலில் விசாரணை நடத்த வேண்டும் என மன்னார்குடி போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதன் பேரில் டாக்டர் இளஞ்சேரன், மாமனார் முத்தழகன், மாமியார் ராணி ஆகியோர் நேற்று காலை மன்னார்குடி கோர்ட்டில் நீதிபதி விஜயன் முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 பேரையும் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி 3 பேரையும் விசாரணைக்காக மன்னார்குடி டி.எஸ்.பி. அசோகன் மற்றும் இன்ஸ்பெக்டர் பழனியப்பன் ஆகியோர் அழைத்து சென்றனர்.
Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்