பாகிஸ்தானின் கராச்சியில் நடைபெற்ற பேரணியில் கையெறி குண்டு வீசப்பட்டதில் 39 பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று மாலை ஜமாஅத்-இஸ்-இஸ்லாமிய சார்பில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணி மீது கையெறி குண்டு வீசியதில் 39 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குல்ஷன்-இ-இக்பால் பகுதியில் பேரணியின் போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கையெறி குண்டு வீசினர் என்று ஜமாஅத்-இ-இஸ்லாமி செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு ஜமாஅத்-இஸ்லாமி அமைப்பு பேரணியை மேற்கொண்டனர். பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்ட அமைப்பான சிந்துடேஷ் அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
இந்த கையெறி குண்டு தாக்குதலில் காயமடைந்தவர்களில் 5 பேர் அல் முஸ்தபா மருத்துவமனைக்கும், ஏழு பேர் ஜின்னா முதுகலை மருத்துவ மையத்திற்கும், 11 பேர் ஆகா கான் பல்கலைக்கழக மருத்துவமனைக்கும், 10 பேர் லியாகத் தேசிய மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவரை எந்த மரணமும் ஏற்படவில்லை.
காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் மிகச் சிறிய காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…