இங்கிலாந்தில் மறு கணக்கீட்டு விவரங்கள் வெளியிடப்பட்டது.அதில், கணக்கில் வரமால் 3,811 பேர் இறந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா கண்டுபிடிக்கபட்டது. தற்போது கொரோனா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 3,221,029 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு 228,252 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவால் இதுவரை 1,001,968 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது. அதிகம் பதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்றாகும். நேற்று வரை 165,221 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மேலும், பலியானோர் எண்ணிக்கை 26,097 ஆக உள்ளது.
இந்நிலையில், சீனா உள்பட பல நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான விவரங்களின் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், பல நாடுகளில் பலியானோர் தொடர்பான தகவல்களை மறு கணக்கீடு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதையெடுத்து, இங்கிலாந்தில் இந்த மறு கணக்கீட்டு விவரங்கள் வெளியிடப்பட்டது.
அதில், கணக்கில் வரமால் 3,811 பேர் இறந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உயிரிழப்புகள் பெரும்பாலும் ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். இதனால், இங்கிலாந்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,097 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து மூன்றாம் இடத்தில் உள்ளது.
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…
டெல்லி : மாநிலங்களவையில் வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த விவாதம் மற்றும் மீனவர்கள் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடைபெற்று…
லக்னோ : நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா…