சமூக சமையலறை’ என்ற பெயரில் டெல்லியில் ஆண்டு முழுவதும், 365 நாட்களும் ஏழ்மையில் உள்ளவர்களுக்கு உணவு அளிக்க்கும்:கெளதம் கம்பீர்
பசியால் வாடும் குடும்பங்களுக்காகவும், ஏழ்மைக் குழந்தைகளின் கல்விக்கு உதவுவதற்காகவும் கிரிக்கெட் வீர்ர் கவுதம் கம்பீர் ‘கவுதம் கம்பீர் பவுண்டேஷன்’ எனும் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
ஏழைக் குழந்தைகளின் கல்விக்காகவும், பசியைப் போக்கவும் பல உதவிகளை செய்து வருகிறார் கவுதம் கம்பீர். கவுதம் கம்பீர் பவுண்டேஷன் மூலம் ‘சமூக சமையலறை’ என்ற பெயரில் டெல்லியில் ஆண்டு முழுவதும், 365 நாட்களும் ஏழ்மையில் உள்ளவர்களுக்கு உணவு அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், ‘இதயத்தில் இரக்கத்துடன், ஒருவருக்கு உணவு வழங்க நான் கையில் தட்டுடன் நிற்கும்போது உலகில் எவரும் பசியுடன் தூங்க கூடாது என்ற பிரார்த்தனை என் உதடுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
முன்னதாக சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல்கள் தாக்குதலால் வீரமரணமடைந்த 150-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளின் கல்வி செலவு முழுவதையும் கம்பீர் ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கவுதம் கம்பீரின் இத்தகைய சமூகப்பணியை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.