36 பேர் சுடப்பட்ட படுகொலைக்கு பிறகு, துப்பாக்கி வைத்திருக்க கடுமையான சட்டம் விதித்தது தாய்லாந்து !..
தாய்லாந்தில் துப்பாக்கி வைத்திருப்பது மற்றும் போதைப்பொருள் சட்டங்கள் கடுமையாக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்குள் புகுந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி, தான் வைத்திருந்த துப்பாக்கியால், அங்கிருந்த 24 குழந்தைகள் உட்பட 36 பேரை சுட்டுகொன்ற சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
துப்பாக்கி விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே பின்னணி சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் மற்றும் உரிமைக்கான சரியான காரணத்தை முன்வைக்க வேண்டும் என்பது ஏற்கனவே நடைமுறையில் இருந்தாலும்,புதியதாக மருத்துவர்களிடமிருந்து மனநல அறிக்கைகள் சேர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
தற்போது துப்பாக்கி வைத்திருப்பவர்கள் துப்பாக்கியின் வாழ்நாளில் உரிமம் பெற மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.