உபேரில் 15 நிமிட பயணத்திற்கு 32 லட்சம் கட்டணமா?- இங்கிலாந்து நபர் ஷாக்!!
இங்கிலாந்திலுள்ள ஒரு நபருக்கு உபேரில் (Uber) 15 நிமிட பயணத்திற்கு £35,000 (இந்திய மதிப்பில் 32 லட்சம்) கட்டணமாக காட்டியுள்ளது.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரிலுள்ள ஆலிவர் கப்லான்(22), 6.4 கிமீ பயணத்திற்கு உபேர் (Uber) டாக்ஸி புக் செய்துள்ளார். வழக்கமாக அவர் ஏறும் இடத்திலிருந்து கிளம்பி நண்பர்களை சந்திப்பதற்கு புறப்பட்டு குறிப்பிட்ட இடத்திற்கு சென்றுள்ளார். முந்தைய நாள் இரவில் குடித்திருந்ததால் மறுநாள் காலை எழுந்ததும் அவர் தன் மொபைலை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். நேற்று அவர் சென்ற 6.4 கிமீ பயணத்திற்கு £35,000(ரூ.32லட்சம்) கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. வழக்கமாக £(10-11) தான் அந்த பயணத்திற்கு கட்டணமாக வசூலிப்பார்கள். உடனே அவர் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு புகார் செய்துள்ளார்.
அவர், தவறுதலாக, சேருமிடத்தை தெற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள அடிலெய்டுக்கு பக்கத்தில் உள்ள ஒரு இடத்தை தேர்ந்தெடுத்துள்ளார். இதனால் அவருக்கு கட்டணம் கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டது என்று உபேர் (Uber) தெரிவித்துள்ளது. இது குறித்து ஆலிவர் கப்லான் கூறும் போது என் வங்கி கணக்கில் போதுமான பணம் இல்லை, இருந்திருந்தால் நான் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருப்பேன் என்று அவர் கூறியுள்ளார். அதன் பிறகு உபேர் (Uber) இதைச் சரி செய்து கட்டணத்தை மாற்றி, அவர் பயணம் செய்ததற்கான கட்டணமாக £10.73 ஐ வசூலித்திருக்கிறது. உபேர் (Uber) நிறுவனமும், இந்த பிரச்னையை உடனடியாக சரி செய்து கொடுத்துள்ளது, மேலும் அவரிடம் இது குறித்து மன்னிப்பும் கேட்டுள்ளது.