342 ராணுவ வீரர்கள் பணி நீக்கம்..!!

Default Image

துருக்கி, ஜூலை 16 துருக்கியில் ராணுவ வீரர்கள், காவல் துறையினர் உள்பட 7,563 பேரைப் பணி நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டது.இது தொடர்பாக அரசு செய்தி நிறுவனமான அனடோலு தெரிவித்திருப்பது: தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ், 7,563 பேர் பணி நீக்கம் செய்யப் பட்டிருக்கிறார்கள். அதில் 342 பேர் ராணுவ வீரர்கள். காவல் துறையைச் சேர்ந்தவர்கள் 2,303 பேர் பணி நீக்கம் செய்யப்பட் டுள்ளனர். மீதியுள்ள நபர்கள் ஆசிரியர் உள்ளிட்ட அரசு ஊழி யர்களாவர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் தேதி துருக்கி பாதுகாப்புப் படைகளில் ஒரு பிரிவினர் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை மேற்கொண்டனர். ஆனால், கிளர்ச்சியாளர்கள் வசம் கட்டுப்பாட்டை இழப்பதற்குள், சில மணி நேரங்களிலேயே ஆட்சிக் கவிழ்ப்பு சதி முறி யடிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து, ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டதாக முப்படைகளைச் சேர்ந்த மூத்த தளபதிகள் கைது செய்யப்பட்டனர். சதியில் தொடர்புள்ளதாக சந்தேகத்தின் பேரில் ஆயிரக் கணக்கானோரைக் கைது செய்யு மாறு அதிபர் எர்டோன் உத்தர விட்டார். நீதிபதிகள், ராணுவ அதிகாரிகள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள், ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டனர்.சுமார் 1 லட்சம் பேர் பதவி நீக்கம் அல்லது இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேசத் துரோக குற்றச்சாட்டின் கீழ் சுமார் 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்ட பின்னர் நாடு முழுவதும் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது.

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்