ரஷ்யாவில் 34.1மில்லியன் கொரோனா சோதனை நடத்தியுள்ளது – கண்காணிப்புக் குழு
ரஷ்யாவில் 34.1 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா சோதனைகளை நடத்தியுள்ளது.
ரஷ்யாவில் கொரோனாவுக்கான 34.1 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில் 2,20,000 க்கும் மேற்பட்ட மக்கள் கண்காணிக்கபட்டு வருகிறார்கள் என்று நாட்டின் மனித நல கண்காணிப்புக் குழுவான ரோஸ்போட்ரெப்னாட்ஸர் இன்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “நாங்கள் ரஷ்யாவில் 34.1 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா வைரஸ் சோதனைகளை நடத்தியுள்ளோம். 220,288 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் என்று கண்காணிப்புக் குழு ஒரு அறிக்கையில் கூறியது. கடந்த 24 மணி நேரத்தில் 3,16,000 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் தற்போது கொரோனா வைரஸால் மொத்தம் 9,46,976 பேர் பாதிக்கப்பட்டுள்ளன மேலும் இந்த நோயால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 16,189ஆக உளது.