ஆமையை வாக்கிங் அழைத்து சென்ற மூதாட்டிக்கு ரூ.33,500 அபராதம்.!

Default Image

கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. அதிலும்  இத்தாலி , அமெரிக்கா , ஸ்பெயின்  மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளை கொரோனா வைரஸ்  அதிகமாக பாதித்து உள்ளது.
இந்நிலையில் இத்தாலியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில் ஆமையை வாக்கிங் அழைத்துச் சென்ற மூதாட்டிக்கு  ரூ.33,500 அபதாரம் விதிக்கப்பட்டது. இத்தாலியில் 20,000 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு ஊரடங்கு உத்தரவை தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆனால் ஒரு சில செயல்கள் மட்டும் அங்கு வீட்டை விட்டு வெளியே வர அனுமதி உள்ளது. அதாவது என்னெவென்றால் அத்தியாவசிய மருந்துகள் வாங்க வெளியே வரலாம். நாயே வீட்டிலேயே வைத்து இருந்தால் வெறி பிடித்து விடும் என்பதால் அதை வாங்கி கூட்டிக் கொண்டு செல்ல அனுமதி உண்டு. இதையும் மீறி நம்ம ஊரை போல் போலீசார் தெரியாமல் வெளியே வந்து பின்னர் மாற்றிக்கொண்டு ஆதாரத்தை காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 15-ம் தேதி  60 வயதுடைய மூதாட்டி மிக மெதுவாக வீட்டுக்கு முன்பு நடந்து கொண்டிருந்தார். உடனே  போலீசார் வந்து அவரிடம் வீட்டைவிட்டு அனுமதியின்றி வெளியே வந்தற்கு  அபராதம் கட்டுமாறு  போலீசார் கூறினார். அந்த மூதாட்டி நான் என் செல்லப்பிராணி வாக்கிங் அழைத்து வந்தேன் என கூறினார்.
பின்னர்  போலீசார் அவருக்கு பின்னால் பார்த்தன  ஒரு சிறிய ஆமை தலையை தூக்கி பார்த்தது. இதை பார்த்த போலீசர் நாயை  மட்டுமே வாக்கிங் அழைத்துச் செல்ல அரசு அனுமதி அளித்துள்ளது. ஆமைய வாக்கிங் அழைத்துச் செல்ல கூடாது  என்று கூறி இந்திய மதிப்பில் ரூ.30,500 அந்த  மூதாட்டிக்கு  அபராதமாக விதித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்