தாதாசாகேப் பால்கே விருதை பாரதிராஜாவுக்கு வழங்க வேண்டும்.! 33 திரைபிரபலங்கள் கடிதம்.!
தாதா சாகேப் பால்கே விருதினை இயக்குனர் பாரதிராஜாவுக்கு வழங்க வேண்டும் என வெற்றிமாறன், பாலா, கமல்ஹாசன்,தனுஷ், பார்த்திபன் என 33 திரைபிரபலங்கள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்திய சினிமாவின் மிக முக்கிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது வருடா வருடம் இந்திய சினிமாவில் சிறப்பாக செயல்பட்டு வந்த திரை கலைஞர்களுக்கு வழங்கப்படும்.
அந்த வகையில், இந்த வருட தாதா சாகேப் பால்கே விருதை இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு வழங்க வேண்டும் என இயக்குனர்களான வெற்றிமாறன், பாலா, ப்ரியதர்சன், நடிகர்களான கமல்ஹாசன்,தனுஷ், பார்த்திபன் தயாரிப்பாளர்களான கலைப்புலி எஸ்.தாணு, எஸ்.ஆர்.பிரபு என 33 திரைபிரபலங்கள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
அதில் , இயக்குனர் பாரதிராஜா சுமார் 45 வருடங்களாக இந்திய சினிமாவில் பல அற்புதமான படைப்புகளை கொடுத்துள்ளார். சாதி பிரச்சனை, தீண்டாமை, வேலையின்மை, பெண் உரிமைகள் என பல சமுக கருத்துள்ள திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் நல்ல நடிகராகவும் வலம் வருகிறார். என்பனவாறு அந்த ஆதரவு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 2018ஆம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருது பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு வழங்கப்பட்டது.