கொரோனா வைரஸ்! சிறப்பு விமானம் மூலம் நாடு திரும்பிய 324 இந்தியர்கள்..!

Default Image
  • சீனாவில் தவித்து வந்த 324 இந்தியர்கள், சிறப்பு விமானம் மூலம் மீட்கப்பட்டுள்ளார்.
  • அவர்களுக்கு இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு படை முகாமில் வைரஸ் தொற்று உள்ளதா என ஆய்வு செய்தனர்.

கொரோனா வைரஸ், சினாவில் உள்ள வுஹான் நகரத்தில் முதல் முதலில் டிசம்பர் மாத இறுதியில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால், இதுவரை 259 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த வைரஸின் தாக்கம், ஜப்பான், கொரியா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சீனா சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 259 பேர் பலியாகினர்.  மேலும், 11,791 பேர் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் என்று கூறியுள்ளது.

இந்நிலையில், வுஹான் பகுதியில் சிக்கியுள்ள 324 இந்தியர்களை மீட்க, ஏர் இந்தியாவின் போயிங் 747 ரக விமானம், டெல்லியில் இருந்து நேற்று சீனா புறப்பட்டது. இன்று காலை டெல்லி வந்த அந்த விமானத்தில் பயணித்த இந்தியர்களை ஹரியானா மாநிலம், மானேசரில் உள்ள இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு வைரஸ் தொற்று உள்ளதா என ஆய்வு செய்தனர்.

Image result for சிறப்பு விமானம் மூலம் நாடு திரும்பிய 324 இந்தியர்கள்..!"

பின், கொரோனா வைரஸ் பாதிப்பில்லாதவர்கள், அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்படுவார்கள். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு உடனடியாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.

மீட்கப்பட்ட பயணிகளில், 211 மாணவர்கள், 110 பேர் பணிபுரியும் தொழில் வல்லுநர்கள் மற்றும் மூன்று மைனர்கள். அவர்களில் 22 பேர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ளவர்கள், ஆந்திரா மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்