ஒரே நாளில் உலகளவில் கொரோனாவுக்கு 32,000 பேர் பாதிப்பு!
சீனா, வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட புதியவகை வைரஸான கொரோனா வைரஸ், அந்நாட்டை வாட்டிவதைக்தது. இதனால் சீனாவில் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் வந்தது. மேலும், உலகளவில் இந்த வைரஸின் தாக்கம் அசுரவேகத்தில் பரவிவருவதால், உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில், உலகளவில் கடந்த 24 மணிநேரத்தில் 32000 பேர் பாதிக்கப்பட்டு, 1344 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 298,073 பேர் பாதிக்கப்பட்டு, 12,528 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.