ஆதாரை கட்டாயமாக்க டிச.31 வரை கெடு நீட்டிப்பு
புதுடில்லி : அரசின் சமூக நல திட்டங்களை பெற செப்டம்பர் 30 ம் தேதிக்குள் ஆதார் எண்ணை இனைப்பது கட்டாயம் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. காலக்கெடுவை நீட்டிக்கும் எண்ணம் ஏதும் இல்லை எனவும் கூறி இருந்தது.இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று இவ்வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு அளித்துள்ள பதிலில், சமூக நல திட்டங்களின் பயன்களை பெறுவதற்கு ஆதார் கட்டாயம் என்பதற்கான கால கெடுவை டிசம்பர் 31 வரை நீட்டிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.ஆதார் தொடர்பான வழக்கில், அந்தரங்க தகவல்கள் அடிப்படை உரிமை என கடந்த வாரம் 9 நீதிபதிகள் பெஞ்ச் மத்திய அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்கி உள்ள நிலையில், இன்று ஆதார் கட்டாயத்திற்கான காலக் கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.