"3,00,000 மக்கள் காலி" புரட்டி போட்ட மைக்கேல் புயல்…!!

Default Image

அமெரிக்காவில் சக்தி வாய்ந்த மைக்கேல் புயல் புளோரிடா மாகாணத்தை  தாக்கியதில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து புளோரிடா அதிகாரிகள் தரப்பில், “புளோரிடாவில் புதன்கிழமை 125 கிலோமீட்டர் வேகத்தில் மைக்கேல் புயல் அம்மாகாணத்தின் வடமேற்கு பகுதிகளை தாக்கியது. இதன் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதில் ஒருவர் பலியானார்.
இந்த புயல் காரணமாக மின்சார கம்பிகள் பல இடங்களில் அறுத்து விழுந்ததால் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இல்லாத சுழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மைக்கேல் புயல் சக்தி வாய்ந்த புயலாக இருப்பதால் அது புளோரிடாவைத் தொடர்ந்து ஜார்ஜியா, அலபாமா ஆகிய மாகாணங்களை நோக்கி  நகர்ந்து அங்கும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மீட்புப் பணிகள் விரைந்து நடந்து வருகிறது” என்று கூறியுள்ளனர்.
மத்திய அமெரிக்காவில் மட்டும் மைக்கேல் புயலுக்கு இதுவரை 13 பேர் பலியானதாகவும், சுமார் 3 லட்சத்துக்கு அதிகமானவர்கள் புளோரிடாவிலிருந்து வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்