மேற்கு ஆப்ரிக்காவில் கனமழையின் எதிரொலி : நிலச்சரிவில் சிக்கி 300 பேர் பலி, 600 பேர் மாயம்
ப்ரீடவுன்: சியரா லியோனில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதனால், அந்நாட்டின் தலைநகரான சியரா லியோனில் உள்ள மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 2,000 க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாகவும், 300க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகின.
பலியானவர்களில் 170 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்திருந்த நிலையில், 600க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளனர்.
இவர்களது நிலை என்னவென்று தெரியவில்லை. இதனால், மீட்புப்பணிகளுக்காக சர்வதேச நாடுகளின் உதவியை அந்நாட்டின் அதிபர் பட்மடா கமாரா கோரியுள்ளார். பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து உணவின்றி தவித்து வருவதால், மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளுக்காக சர்வதேச நாடுகள் உதவிட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.