300 கோடி ரூபாய் வரை மோசடி செய்த இந்திய தொழிலதிபருக்கு 500 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, துபாய் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
துபாய் நீதிமன்றம்,நிதி நிறுவனம் நடத்தி ஆயிரத்து 300 கோடி வரை மோசடி செய்த இந்திய தொழிலதிபருக்கு 500 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
கோவா மாநிலத்தைச் சேர்ந்த சிட்னி லிமோஸ் மற்றும் ரியான் பெர்ணான்டஸ் ஆகியோர் துபாயில் நிதி நிறுவனம் நடத்தினர். தங்கள் நிறுவனத்தில் 25 ஆயிரம் டாலர்கள் முதலீடு செய்வோருக்கு இரட்டிப்பு பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
கவர்ச்சி விளம்பரத்தை நம்பிய ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் சிட்னி லிமோஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் முதலீடு செய்தனர். முதலீட்டாளர்களை ஏமாற்றிய அந்த நிறுவனம் மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்ததை அடுத்து, 2016-ம் ஆண்டு துபாய் பொருளாதார துறை அந்நிறுவனத்தை மூட உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து லிமோஸ் மற்றும் ரியான் பெர்ணான்டஸ் இருவரும் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், லிமோஸுக்கு 500 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து துபாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2015-ம் ஆண்டு கோவாவில் நடந்த கால்பந்து போட்டியில் முக்கிய விளம்பரதாரராக லிமோஸின் நிறுவனம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.