30ஆண்டுகள் மகனின் நீதிக்காக போராடியும் பயனில்லை.! ஆதங்கத்தில் கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்த டூவிட்.!

Default Image

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் தாய்க்கு நீதி வழங்க வேண்டும் என்றும், பேரறிவாளனை ரிலீஸ் செய்ய கோரியும் இயக்குநரான கார்த்திக் சுப்பராஜ் டூவிட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதில் 7 பேரை கொண்ட குழுவை கைது செய்து சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுவிக்க கோரி பல அமைப்புகள் போராட்டங்களையும், கோரிக்கையும் செயல்படுத்தி வருகின்றனர். ஆனால் நீதி கிடைத்த பாடில்லை என்று கூறுகிறார் குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளனின் தாயாரான அற்புதம்மாள். அவரும் தனுஷ் மகன் உட்பட 7பேரை விடுதலை செய்ய கோரி கடந்த 30ஆண்டுகளாக ஏறாத இடங்கள் இல்லை என்று கூறுகிறார்.

பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாள் டுவிட்டரில் பகிர்ந்த பதிவில் கூறியதாவது, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வெடி குண்டுவெடிப்புக்கு பேட்டரி வாங்கி கொடுத்ததற்காக 30 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள் ஜூன் 11 ம் தேதி கைது செய்து போலீஸாரால் விசாரணைக்கு அழைத்து சென்றனர் , விசாரித்து விட்டு காலையில் அனுப்பிடறோம்னு இரவு 10.30 மணியளவில் கூட்டிட்டு போனாங்க. 8 நாட்கள் என் புள்ளையை சட்ட விரோதமா வச்சுக்கிட்டு, வேப்பேரியில் சுத்தி வளைச்சு பிடிச்சதா கதை சொன்னாங்க. அங்க ஆரம்பிச்ச அநீதி இன்னும் முடியல விடியல என்று உருக்கமான பதிவு ஒன்றை அற்புதம்மாள் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது இவருக்கு ஆதரவு தெரிவித்து இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான கார்த்திக் சுப்பராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்யாத குற்றத்திற்காக பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 30ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இது அதிகம், இனியாவது அவரை ரிலீஸ் செய்யுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் தனது மகனை விடுவிக்க நீதி கோரி 30ஆண்டுகளாக ஒரு தாய் போராடி வருகிறார். ஆனால் இன்னும் அதற்கு பதிலளிக்கப்படவில்லை என்று கூறி #StandwithArputhamAmmal என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டுள்ளார். தற்போது இவரின் இந்த டூவிட்க்கு ஆதரவுகள் வருவதோடு எதிர்ப்புகளும் கிளம்பி வருகின்றன.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்