இந்தியாவின் கொரோனா சிகிச்சைக்காக எகிப்தில் இருந்து முப்பது டன் எடையுள்ள மருத்துவ உபகரணங்கள் மூன்று விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளிலும் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். எனவே, ஆக்சிஜன், மருத்துவமனை உபகரணங்கள், மருந்துகள் உள்ளிட்டவற்றிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அதனை சரி செய்வதற்கு மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், தற்போது வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் கொரோனா சிகிச்சைக்கு தேவையான பல்வேறு மருத்துவ உபகரணங்கள் விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் இதுவரை வழங்கி உதவி உள்ளது.
தற்போதும் எகிப்து நாட்டில் இருந்து 30 டன் எடையுள்ள மருத்துவ காரணங்கள் மூன்று விமானங்கள் மூலமாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் 8,000 டெம்ரெசிவர் மருந்து குப்பிகள், 300 ஆக்சிஜன் சிலிண்டர், 50 ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட பல உபகரணங்கள் விமானங்களில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் நட்பு நாடு களில் ஒன்றான எகிப்தில் இருந்து வந்துள்ள இந்த மருத்துவ உபகரணங்கள் மிகவும் மதிப்பு வாய்ந்தது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…
டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…
துபாய் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22-ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்படவுள்ளது. முதல் போட்டியானது நடப்பு சாம்பியன்…