ஆப்கானிஸ்தானில் வான்வழி தாக்குதல் – 30 தலிபான் தீவிரவாதிகள் பலி!

ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 30 தலிபான்கள் உயிரிழந்துள்ள நிலையில், 17 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் தொடர்ந்து கொண்டுள்ளது. இந்நிலையில், தற்பொழுதும் ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை சுற்றிவளைத்த ஆப்கானிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்த தொடங்கி உள்ளது.
இதில் 30 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ள நிலையில், 17 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் ஜின்ஹுவா அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பயங்கரவாதிகளிடம் இருந்து ஆறு இரு சக்கர வாகனங்கள், இரண்டு பதுங்கு குழிகள், பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களையும் இராணுவத்தினர் அழித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், ஆப்கானிஸ்தானில் உள்ள 419 இடங்களை தலிபான் தீவிரவாதிகள் ஆக்கிரமித்துள்ள நிலையில், காபூல் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் ஆப்கானிஸ்தான் இராணுவத்தினர் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
தெலுங்கானாவில் பயங்கரம் : சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலார்கள்.! 48 மணிநேரமாக தொடரும் மீட்புப்பணிகள்….
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025