3 மணி நேரத்தில் 30 நிலநடுக்கங்கள்…. ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படும் என எச்சரிக்கை!

japan earthquake

ஜப்பானின் மேற்கு பகுதியில் இன்று பிற்பகல் 12 மணிக்கு மேல் 5.5 ரிக்டர் அளவு முதல் 7.6 ரிக்டர் அளவு வரை பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதை அடுத்து, கடற்கரையோர நகரங்களுக்கு மிக அதிக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பயங்கர நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார். ஜப்பான் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நகரங்களில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஹோன்ஷு அருகே சுமார் 15 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இஷிகாவா, நிகாடா, டோயாமா மற்றும் யமகட்டா பகுதியில் கடலில் 5 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து, கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற அந்நாட்டு அரசு அறிவுறுத்தியது. இருப்பினும், அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து, ஜப்பானை சுனாமி அலைகள் தாக்கி வருவதாக பல்வேறு வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஜப்பானை தொடர்ந்து வடகொரியா மற்றும் ரஷ்யாவில் சுனாமி எச்சரிக்கை!

சுனாமி அலைகள் தொடங்கியுள்ளதால் ஜப்பானிய மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில், மத்திய ஜப்பானில் 3 மணி நேரத்தில் சுமார் 30 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 30 முறை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5க்கும் மேல் பதிவானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல், ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படும் என்றும் அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜப்பானில் தற்போது தாக்கியதை விட மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் அடுத்த வாரம் ஏற்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி அலைகள் தாக்கி வரும் நிலையில், வடகொரியா, ரஷ்யா நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்