அத்திக்கடவு திட்டம்… 30 மாதங்களில் முடிப்போம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி…

Default Image

சென்னை:மத்திய அரசின் உதவி இல்லாமலேயே அத்திக்கடவு திட்டம்… 30 மாதங்களில் முடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி…திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்ட மக்களுக்கு பயனளிக்கும், அத்திக்கடவு – அவினாசித் திட்டம், 30 மாதங்களில் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இவ்விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு முதல்கட்டமாக 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
ஒட்டுமொத்தமாக ஆயிரத்து 516 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இத்திட்டத்திற்கான பணிகள், வரும் டிசம்பர் மாதத்திற்குள் டெண்டர் விடப்பட்டு, 30 மாதங்களில் அத்திக்கடவு – அவினாசி திட்டம் நிறைவேற்றப்படும் எனவும் முதலமைச்சர் உறுதிபடத் தெரிவித்தார்.
இக்திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசின் நிதி தேவையில்லை என்றும், மாநில அரசின் நிதியைக் கொண்டே அத்திக்கடவு- அவிநாசி திட்டம் நிறைவேற்றப்படும் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்