ஆஸ்கார் விருது வென்ற நடிகரின் நேர்காணலில் குறுக்கிட்ட 3 வயது மகன்.!
நடிகர் ஜார்ஜ் க்ளோனி ஜூம் ஆப் வழியாக நடைபெற்ற நேர்காணலில் அவரது 3வயது மகன் குறுக்கிட்டு பேசியுள்ளார்.
அமெரிக்க நடிகரும் , திரைப்பட தயாரிப்பாளரும், ஆஸ்கார் விருது வென்றவருமான ஜார்ஜ் திமோதி க்ளோனி சமீபத்தில் GQ -வின் அட்டைப்படத்திற்காக ஜூம் ஆப் வழியாக நடைபெற்ற நேர்காணலில் பங்கேற்றார் .அப்போது ஜார்ஜ் அவர்களின் 3 வயது மகன் அலெக்சாண்டர் இன்டர்வியூவின் இடையில் குறுக்கிட்டு பேசியுள்ளார் .
59 வயதான ஜார்ஜ் க்ளோனி , நேர்காணலில் பேசிய போது ,தனது மனைவி அமலை நான் சந்திப்பதற்கு முன்பு எனது வாழ்க்கை முழுமையடையாமல் இருந்ததாக கூறினார் .மேலும் என் சொந்தத்தை விட வேறொருவரின் வாழ்க்கை தான் எனக்கு மிக முக்கியம் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை என்று கூறிய அவர் ,மேலும் உணவளிக்கப்பட வேண்டிய இரண்டு பேரை தான் சமாளிக்க வேண்டி உள்ளதாகவும் ,அவர்கள் மிகவும் சிறியவர்கள் என்றும் கூறுகிறார்.அப்போது அவரது இரட்டை மகன்களில் ஒருவரான 3 வயதான அலெக்சாண்டர் நேர்காணலின் இடையில் நுழைந்தார் .
அப்பொழுது,ஜார்ஜ் தனது மகனை நேர்காணலில் உள்ளவருக்கு வணக்கம் சொல்ல அழைத்தார்.மேலும் அலெக்சாண்டரிடம் ,உங்கள் முகத்தில் சாக்லேட் இருப்பது உங்களுக்கு தெரியுமா? அது என்ன? உங்களிடம் சாக்லேட் இருக்கிறாதா என்று ஜார்ஜ் கேட்டார் .அதற்கு ஆம் என்று பதிலளித்து, என்னுடைய மூன்றாம் பிறந்தநாளுக்கு சாக்லேட்டை பெற்றதாக குறும்புத்தனமாக பதிலளித்தார் அலெக்சாண்டர்.நடிகர் ஜார்ஜ் க்ளோனியின் மனைவி அமலா ஒரு மனித உரிமை வழக்கறிஞர் என்பதும் ,இந்த தம்பதியினருக்கு அலெக்சாண்டர் மற்றும் எலா என்ற இரண்டு இரட்டை குழந்தைகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.