அம்மாவின் ஃபோனில் 54,000 -க்கு உணவு ஆர்டர் செய்த 3 வயது குழந்தை!

குழந்தைக்கு விளையாட கொடுத்த போனில் 54 ஆயிரத்துக்கு உணவு ஆர்டர் செய்த குழந்தை.
முன்பெல்லாம் பெரியவர்கள் ஸ்மார்ட்போன் உபயோகிப்பது என்பது கடினமான ஒன்றாக இருந்தது. ஆனால் தற்பொழுது பிறந்த குழந்தை கூட கையில் போனை கொடுத்தால் அனைத்தும் அறிந்து கொள்ளும் போல அவ்வளவு தூரம் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. குழந்தைகளின் அறிவு வளர்ச்சியும் அதிக அளவில் காணப்படுகிறது. நவீன காலத்திற்கு ஏற்ப குழந்தைகளும் தங்களை மாற்றிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்பொழுது குழந்தைகளுக்கு விளையாடுவதற்காக, குழந்தையின் அழுகையை அடக்க பெற்றோர்கள் தங்களது போனை கொடுத்து விட்டு சாதாரணமாக சென்று விடுகிறார்கள். இதனால் உடல் ரீதியான பிரச்சினைகள் குழந்தைகளுக்கு ஏற்பட்டாலும் பிரேசிலில் பொருளாதார ரீதியாக ஒரு மூன்று வயதுக் குழந்தையால் அவரது பெற்றோருக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றால் பாருங்களேன்.
பிரேசில் நாட்டில் உள்ள ரெசிப் எனும் பகுதியில் வசித்து வரக்கூடிய டாம் எனும் மூன்று வயது குழந்தைக்கு அவரது தாய் போனை கையில் கொடுத்து விட்டு அவர் வெளியில் சென்றுவிட்டார். இந்த குழந்தை அதற்க்கே தெரியாமல் உணவு ஆர்டர் செய்யும் செயலி மூலம் பல்வேறு பொருட்களை ஆர்டர் செய்து விட்டது. மொத்தமாக ஆர்டர் செய்து உள்ள உணவுகளில் விளம்பர உணவுகள், மகிழ்ச்சியான உணவு, சிறப்பு பொம்மைகள், மில்க்ஷேக், தண்ணீர் பாட்டில் என இந்திய மதிப்பில் 54 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை அந்த குழந்தை அநத செயலி மூலமாக அதனை அறியாமலேயே ஆர்டர் செய்துள்ளது.
வீட்டுக்கு ஆர்டர் செய்யப்பட்ட பொருட்கள் வந்ததும் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பணத்தைக் கொடுத்து டெலிவரி பாயை அனுப்பி விட்டாலும் எப்படி இது நடந்தது என தெரிந்து கொண்டபோது மிக ஆச்சரியமாக இருந்தது. இது குறித்து அக்குழந்தையின் பெற்றோர் கூறுகையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரக்கூடிய கூட்டுக் குடும்பம் ஆகிய எங்களது குடும்பம் இருந்ததால் உணவுகளைப் பகிர்ந்து கொண்டோம் எனவே உணவு எதுவும் வீணாகவில்லை. ஆனால் நாங்கள் கொரோனா ஊரடங்கின் போது அடிக்கடி உணவுகளை ஆர்டர் செய்து வாங்கியதால் குழந்தை அதனை கற்றுக்கொண்டதாக அக்குழந்தையின் பெற்றோர் கூறியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!
February 25, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025