நீச்சல் குளத்தில் மூழ்கிய தனது நண்பனை விரைந்து காப்பாற்றிய 3 வயது சிறுவனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் இடம்பெருனா பகுதியில் உள்ள நீச்சல் குளம் ஒன்றில் மூன்று வயது சிறுவன் ஆர்தர் என்பவர் பொம்மை போட்டு தள்ளி விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவருடன் சேர்ந்து விளையாட வந்த இன்னொரு மூன்று வயது ஹென்ரிக் எனும் சிறுவன் அவரது நண்பர் ஆர்தருடன் சேர்ந்து தண்ணீரை தள்ளிவிட்டு பொம்மையை வைத்து விளையாடி உள்ளனர். இந்நிலையில் ஹென்ரிக் திடீரென்று நீச்சல் குளத்தில் தவறி விழுந்து விடவே அக்கம் பக்கம் திரும்பிப் பார்த்துள்ளார் ஆர்தர்.
உதவிக்கு யாரும் இல்லாததால் அவனே தனது கையை நீட்டி சிறுவனின் தலையை மேலே கொண்டுவர முயற்சி செய்துள்ளான். பின்பு அவன் கையை பிடித்து தூக்கி மேலே அவனே தூக்கியுள்ளான். இந்த காட்சி அந்த பகுதியில் இருந்த அனைத்து சிசிடிவி கேமராக்களிலும் பதிவாகி உள்ளது. சிறுவனின் இந்த செயல் பலரையும் வியக்க செய்துள்ளது. துணிச்சலாக செயல்பட்ட ஆர்தரை அங்குள்ள உள்ளூர் போலீசார் உற்சாகப் படுத்தும் வகையில் கூடைப்பந்தும், நிறைய இனிப்புகளும் வாங்கிக் கொடுத்துள்ளனர்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…