3 ஸ்பூன் ரவை இருந்தா போதும்… அட்டகாசமான ரவை பால் பாயசம் தயார்!
ரவையை வைத்து எப்படி முறையாக சுவையான ரவை பால் பாயசம் செய்வது என பார்க்கலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
- ரவை
- பால்
- சர்க்கரை
- ஏலக்காய்
- முந்திரி
- உப்பு
- ப்ளம்ஸ்
செய்முறை
முதலில் ஒரு சட்டியில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி அதில் முந்திரி, ப்ளம்ஸ் மற்றும் தேவைப்பட்டால் பாதம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வருது எடுத்து வைத்து கொள்ளவும். அதன் பின் அந்த சட்டியிலேயே கொஞ்சமாக ரவை எடுத்து நன்றாக வறுக்கவும். மனம் வர துவங்கியதும் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக ரவை ஆவியும் வரை கிளறவும்.
அதன் பின்பதாக முன்னமே காய்ச்சி வைத்துள்ள பாலை இந்த கலவையில் சேர்த்து நன்றாக கிளறவும். குறைந்த தீயில் அடுப்பை வைத்துக்கொண்டு அதனுடன் ஏலக்காய், உப்பு சிறிதளப்பு சேர்த்து நன்றாக கிளறவும். பின் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் மட்டும் குறைந்த தீயில் விட்டு வருது வைத்துள்ள முந்திரி, ப்ளம்ஸ் ஆகியவற்றை சேர்த்து இறக்கினால் அட்டகாசமான ரவை பாயசம் தயார்.