துருவ் விக்ரம் நடிக்கும் 3 திரைப்படங்கள்.?
நடிகர் துருவ் விக்ரம் நடிக்கும் 3 திரைப்படங்கள் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.
தமிழில் இயக்குனர் கிரீசாயா இயக்கத்தில் ஆதித்ய வர்மா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் துருவ் விக்ரம். முதல் படத்திலே தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் துருவ் விக்ரம் மூன்று திரைபடங்களில் கமிட் ஆகியுள்ளார். அந்த படங்களை பற்றி பார்க்கலாம்.
முதலாவதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சியான் 60 படத்தில் தனது தந்தை விக்ரமுடன் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் துருவ் விக்ரம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக அறிமுக இயக்குனர் ஒருவரிடம் நடிகர் துருவ் விக்ரம் ஒரு கதைகேட்டுள்ளதாகவும், அந்த கதை அவருக்கு பிடிக்க உடனடியாக ஓகே சொல்லிவிட்டாராம். இதனால் இவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.