சட்டை பையில் கோழிக்குஞ்சிகளுடன் பார்க்கவே அள்ளி கொஞ்ச தோன்றும் 3 சிறுகுழந்தைகள் – இணையத்தை கலக்கும் வீடியோ உள்ளே!
பார்த்தாலே அள்ளி கொஞ்ச வேண்டும் போலத் தோன்றும் அப்பாவி முகத்துடன் கூடிய மூன்று சிறு ஆண் குழந்தைகள், தங்கள் சட்டைப் பையில் கோழி குஞ்சுகளை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும் வீடியோ காட்சி இணையதள பக்கங்களில் படு வைரலாகி வருகிறது.
ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு கணித ஆசிரியரான குட்ஸியா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் 3 அப்பாவி குழந்தைகளை தங்கள் சட்டைப் பைகளில் கோழிக்குஞ்சுகள் வைத்துக்கொண்டு நடந்து செல்லக்கூடிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். 33 வினாடிகள் மட்டுமே உள்ள இந்த வீடியோவில் மூன்று சிறுவர்களும் ஒன்றாக நடந்து கொண்டிருக்கையில், ஒருவர் சிறுவர்களை நிறுத்தி அவர்கள் பையில் என்ன இருக்கிறது என்று கேட்க, குழந்தைகளில் ஒருவர் கொஞ்சம் துணிந்தவர் ஆக, உண்மையில் தனது சட்டைப்பையில் இருந்த ஒரு சிறிய கோழி குஞ்சை எடுத்து அவரிடம் காண்பித்து விட்டு மற்றொரு பயனை பார்த்தவாறு நிற்கிறான்.
மற்ற சிறுவனும் தனது சட்டைப்பையிலிருந்து கோழி குஞ்சை வெளியே எடுத்துக் காட்டுகிறான். குழந்தை உள்ளமே கடவுள் உள்ளம் என்பதற்கு இச்சிறுவர்கள்தான் எடுத்துக்காட்டு போல, இதயத்தை உருக்கும் அட்டகாசமான இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ “கோழி குஞ்சுகளால் திருடப்பட்ட கோழி குஞ்சுகள்” என்ற தலைப்பில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
جوجه مرغ دزدی توسط این جوجهها???????? pic.twitter.com/p67XKDa2qF
— Qudsia Qanbary ➐ (@qudsia_qanbary) August 3, 2020