அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் போர்ட் வொர்த் நகரின் ஒரு தேவாலயம் உள்ளது.இந்த தேவாலயத்தில் நேற்று முன்தினம் அதாவது ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த பிராத்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது பிரார்த்தனையில் இருந்த ஒரு மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட்டார். இதனால் தேவாலயத்துக்குள் இருந்தவர்கள் அனைவரும் பயத்தில் கத்தினர்.
பலர் அங்கு உள்ள மேஜைகளுக்கு அடியில் பதுங்கினர். இந்நிலையில் அந்த மர்ம நபர் சுட்டதில் 3 பேர் உடலில் குண்டுகள் பாய்ந்தது. இந்த சம்பவத்தை அந்த நபர் வீடியோவாக சமூக வலைத்தளத்தில் நேரலையில் ஒளிபரப்பினார். பின்னர் தேவாலயத்தின் பாதுகாவலர்களில் ஒருவர் தனது கைத்துப்பாக்கியை எடுத்து அந்த மர்ம நபரை சுட்டு கொன்றார்.
துப்பாக்கி குண்டு பாய்ந்த 3 பேரையும் போலீசார் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அந்த மூன்று பேரில் சிகிச்சை பலனின்றி 2 பேர் இறந்தனர். மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.இந்த தாக்குதல் யார் நடத்தியது..? தாக்குதலின் பின்னணி என்ன..? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…