வியட்நாமில் படகு கவிழ்ந்து 3 பேர் பலி..!

Default Image

வியட்நாமில் இருக்கும் ஏரியில் படகு கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

பா ரியா-வுங் டவ் மாகாணத்தில் பூ மை என்ற பகுதியில் அமைந்துள்ள ஏரியில் 5 நபர்கள் படகில் சென்றுள்ளனர். இது அப்பகுதியில் மிக அதிக ஆழமிருக்கும் ஏரி. இந்நிலையில், இந்த படகு திடீரென ஏரியில் கவிழ்ந்துள்ளது. படகில் இருந்த 5 பெரும் கீழே விழுந்துளனர். மேலும் அவர்கள் அனைவரும் 22 முதல் 27 வயதுடைய இளைஞர்கள். இதில் இருவர் மட்டும் நீந்தி கரைக்கு வந்துள்ளனர்.

மீதம் இருந்த 3 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர். பின்னர் இவர்களின் உடல்களை தேடும் முயற்சியில் இறங்கியதில், பல மணிநேரத்திற்கு பிறகு நேற்றிரவு மூவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது. இதே ஏரியில் கடந்த மாதம் 29 ஆம் தேதி படகு விபத்து ஏற்பட்டது. அதில் 6வயது மற்றும் 9 வயது இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்