இஸ்ரேலிய ராணுவத்தினரால் கொல்லப்பட்ட 3 இஸ்ரேலிய பணைய கைதிகள்..!

Israel Hamas War

கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி முதல் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர்  துவங்கியது. இந்த போர் தொடங்கி 2 மாதங்களை கடந்த நிலையில், இந்த போர் இதுவரை முடிவுக்கு வந்தபாடில்லை.  இந்த போரில் இதுவரை 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இருதரப்பினரும் நடத்திய தாக்குதல், காஸாவில் வாழ்ந்த லட்சக்கணக்கான மக்கள், உறவுகளை, உடைமைகளை இழந்து அருகாமையில் உள்ள நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.

காஸா மீதான தாக்குதலை குறைத்திடுங்கள்.! இஸ்ரேலிடம் வலியுறுத்திய அமெரிக்கா.!

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாட்டின்  வேண்டுகோளுக்கு இணங்க முதலில் 4 நாள் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. பின்னர் கூடுதலாக 2 நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. இந்த போர் நிறுத்தத்தை தொடர்ந்து, காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதலை நடத்தியுள்ளது. பதிலுக்கு ஹமாஸ் அமைப்பும் இஸ்ரேல் ராணுவம் மீது தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீர்ரகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த கூடிய நபர்கள் என எண்ணி, தவறுதலாக 3 பிணைய கைதிகளை இஸ்ரேல் ராணுவம்  கொன்றுள்ளதாக இஸ்ரேல் ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் ராணுவம் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்