பாகிஸ்தானில் பயங்கர ஆயுதங்களுடன் நட்சத்திர விடுதிக்குள் புகுந்த தீவிரவாதிகள்
பாகிஸ்தானின் குவாதர் நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்குள் தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானில் கவதார் நகரில் நட்சத்திர விடுதி உள்ளது.இந்த நட்சத்திர விடுதியில் ஆயுதங்களுடன் 3 தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர விடுதியில் வெளிநாட்டினர் யாரும் இல்லை என பாகிஸ்தான் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.