பிரேசிலில் ஸ்புட்னிக் உட்பட 3 கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு ஒப்புதல்!

Default Image

பிரேசிலில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் உட்பட 3 மருந்துகளுக்கு அந்நாட்டு மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.

உலகளவில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து, இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது.

அதன்படி தற்பொழுது ஸ்புட்னிக், ஃபைசர், அஸ்டிராஜெனிகா உள்ளிட்ட தடுப்பு மருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இங்கிலாந்தில் பரவதொடங்கிய உருமாறிய கொரோனா வைரஸ், மற்ற உலக நாடுகளில் பரவதொடங்கியது. இந்தநிலையில், பிரேசிலில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு, அந்நாட்டு மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி, சீனாவின் சினோவாக் மற்றும் இங்கிலாந்தின் அஸ்டிரா ஜெனிகா தடுப்பு மருந்திற்கும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்