மேகாலயாவில் நிலநடுக்கம்.. 3.3 ரிக்டர் அளவில் பதிவு.!
மேகாலயாவில் தூரா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவாகியுள்ளது.
மிதமான நிலநடுக்கம் மேகாலயாவில் வெள்ளிக்கிழமை அன்று மாலை தாக்கியது. 3.3 ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் மேகாலயாவில் TURA அருகே 79 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
மேலும் நேற்று என்.சி.ஆரில் 2.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹரியானாவின் ரோஹ்தக் அருகே மையப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஜூன் 25 அன்று, திரிபுராவில் பூகம்ப நடுக்கம் ஏற்பட்டது. இதன், அளவு 2.8 ரிக்டர் அளவிடப்பட்டது. நாகாலாந்து மற்றும் மிசோரத்தில் வியாழக்கிழமை அதிகாலையில் ஒரே இரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.