கொரோனா பரவலின் 2வது அலை தற்போது ஐரோப்பிய நாடுகளை தாக்கி வருகிறது.அதன்படி பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.
கொடூரமாக வீசி வரும் 2வது அலையால் இங்கிலாந்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
இவ்வாறு இருக்க மேலும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் 2வது முறையாக
முழு ஊரடங்கை அமல்படுத்தத் தொடங்கிவிட்டது.
அதன்படி தென் ஐரோப்பாவில் உள்ள போர்ச்சுகல் நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் அங்கு 4,007 பேருக்கு கொரோனா தொற்று உறுதியது குறிப்பிடத்தக்கது.
போர்ச்சுகல் நாட்டில் அதிகளவில் கொரோனா பரவுவதை தடுக்க அந்நாட்டு அரசாங்கம் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதன்படி நவ.,4ந்தேதி முதல் பள்ளி, கல்லூரி மற்றும் அத்தியாவசிய தேவை தவிர்த்தி வேறு எதற்காகவும் பொது மக்கள் வெளியில் வரக்கூடாது என்று அறிவித்திள்ளது.
மேலும் அங்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள 121 மாநகராட்சிகளில் மிக தீவிரமாக ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போர்ச்சுகலில் 70% மக்கள் தற்போது பாதிப்பு அதிகமாக பரவி வரும் பகுதிகளில் ஊரடங்கு விதிகளை மக்கள் கடுமையாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் அண்டோனியோ கோஸ்டா தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று திடீரென சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 3)…
பெங்களூர் : நீங்க எமனாக மாறுவீர்கள் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என சமூக வலைத்தளங்களில் சிராஜை பார்த்து ரசிகர்கள் பேசி…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை மற்றும்…