வங்காளதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி..!
வங்காளதேசம் அணி 86 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்சில் சதம் அடித்த டேவிட் வார்னர் 8 ரன்னிலும், கேப்டன் ஸ்டீவன் சுமித் 16 ரன்னிலும், தொடக்க ஆட்டக்காரர் ரென்ஷா 22 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். பீட்டர் ஹேன்ட்ஸ்கோம் 16 ரன்னுடனும், மேக்ஸ்வெல் 25 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. டாக்காவில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 20 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி கண்டு இருந்தது.
முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டும் சாய்த்த ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த போட்டி தொடரில் 22 விக்கெட்டுகள் அள்ளிய நாதன் லயன், 2 சதம் உள்பட 251 ரன்கள் சேர்த்த டேவிட் வார்னர் இருவரும் தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டனர்.