2 மணி நேரம் பரோலில் வெளியே வந்தார் நடிகர் திலீப்..!
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் அலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2 மாதங்களுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் திலீப் தனது தந்தையின் நினைவு தின சடங்கில் பங்கேற்பதற்காக பரோல் கோரியிருந்தார். இதை ஏற்று திலீப்பிற்கு 2 மணி நேரம் பரோல் வழங்கி அலுவா மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி ஏறக்குறைய 2 மாதங்களுக்கு பிறகு நடிகர் திலீப் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். 2 மணி நேரம் மட்டுமே பரோல் வழங்கப்பட்டு இருப்பதால் இன்றே அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார்.