நெல்லையில் போலீசாரை தாக்கி விசாரணைக் கைதி கடத்தல்: கத்தியால் குத்தியதில் 2 போலீசார் காயம்

Default Image
நெல்லை: நெல்லை மாவட்டம் நான்குநேரியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட விசாரணைக் கைதியை பாதி வழியில் தடுத்து நிறுத்தி 15 பேர் கொண்ட கும்பல் அவரை மீட்டுச் சென்று இருக்கிறது. உடன் சென்ற காவல்துறையினரையும் அவர்கள் கத்தியால் குத்தியிருக்கின்றனர். நெல்லை மாவட்டம் நான்குநேரி அருகே உள்ளது வாகைக்குளம். இந்த வாகைக்குளத்தில் மணல் எடுப்பதற்காக இரு தரப்பினர்களிடையே மோதல் ஏற்பட்டது. கடந்த 27ம் தேதி உதயக்குமார் தரப்பைச் சார்ந்தவர்கள், எதிரான மஞ்சான்குளத்தைச் சேர்ந்த சுடலைக்கண்ணு என்பவரின் வீட்டை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள்.

இதனால் வீட்டில் உள்ள டிவி, குளிர்சாதன பெட்டி உள்ளிட்டவை சேதடைந்துள்ளது. இது சம்மந்தமாக நான்குநேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு சம்மந்தமாக குற்றவாளியாக கருதப்படும் உதயக்குமாரை நேற்று இரவு காவல்துறையினர் பிடித்து நான்குநேரியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக காவல் வாகனத்தில் சுமார் 4 பேர் கொண்ட காவல்கள் நேற்று இரவு 11.15 மணிக்கு கொண்டு வந்துள்ளனர்.

அப்போது மறுகால்குறிச்சியைச் சேர்ந்த 15 பெண்கள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் நான்குநேரி தேசியநெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு விசாரணைக் கைதி உதயக்குமாரை கொண்டு வரும் வாகனத்தை சூழ்ந்து, வாகனத்தில் இருந்த காவலர்கள் கருணை ராஜ், சதீஸ்குமார் உட்பட 4 பேரை தாக்கி உதயக்குமாரை மீட்டுச் சென்றனர். காயமடைந்த காவலர்கள் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு கத்திகுத்து மற்றும் கம்பால் அடித்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது சம்பந்தமாக நான்குநேரி போலீசார் மீண்டும் மறுகால்குறிச்சியைச் சார்ந்த சுமார் 30க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இரவு சாலை மறியலில் ஈடுபட 50க்கும் மேற்பட்டவர்கள் 2 வாகனங்களில் வந்தனர். அந்த 2 வாகனத்தை தான் தற்போது போலீசார் மீட்டுள்ளனர். கைதி உதயக்குமாரை அவர்கள் 2 சக்கர வாகனத்தில் தான் கடத்தி சென்றிருக்கிறார்கள். அவர்கள் நான்குநேரி பகுதியில் தான் இருக்கிறார்களா, அல்லது சுற்று வட்டாரங்களில் இருக்கிறார்களா என்று போலீசார் தேடி வருகின்றனர்.

தற்போது வரை யாரையும் போலீசார் கைது செய்யவில்லை. மேலும் கடத்திச் செல்லப்பட்ட கைதி உதயக்குமாரையும் அவர்கள் எங்கு வைத்திருக்கிறார்கள் என்பதை பற்றியும் அவர்கள் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் நான்குநேரி காவல்துறை ஆய்வாளரை உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றம் செய்திருக்கிறார்கள். இவரின் கவனக்குறைவு காரணமே கைதி கடத்திச் செல்லப்பட்டதற்கு காரணம் என்பதால் மாற்றம் செய்திருக்கிறார்கள்.
Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்