2வது டெஸ்ட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றி அசத்தியது இலங்கை….!

Default Image

பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வந்த இலங்கை அணி. 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றதன்மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக இலங்கை கைப்பற்றி அசத்தியது.
பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு இடையே கடந்த 6-ஆம் தேதி தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை 159.2 ஓவர்களில் 482 ஓட்டங்கள் குவித்தது.
அந்த அணியில் கருணாரத்னே அதிகபட்சமாக 196 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார்.
பாகிஸ்தான் தரப்பில் யாசிர் ஷா அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்து ஆடிய பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 90.3 ஓவர்களில் 262 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
இலங்கை தரப்பில் தில்ருவன் பெரேரா, ரங்கனா ஹெராத் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் 220 ஓட்டங்கள் முன்னிலைப் பெற்ற இலங்கை தனது 2-வது இன்னிங்ஸில் 96 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
பாகிஸ்தான் தரப்பில் வஹாப் ரியாஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
பாகிஸ்தான் 317 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கி 248 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இலங்கை 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.
பாகிஸ்தானில் ஆஸாத் ஷஃபிக் அதிகபட்சமாக 112 ஓட்டங்கள் எடுத்தார்.
இலங்கையின் தில்ருவன் பெரேரா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அந்த அணியின் கருணாரத்னே ஆட்டநாயகன், தொடர்நாயகன் ஆகிய விருதுகளைத் தட்டிச் சென்றார்.
இந்த வெற்றியின்மூலம் தொடரை மொத்தமாக கைப்பெற்றியது இலங்கை அணி.

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்