அமெரிக்காவில் காந்தியின் 294 கிலோ வெண்கல சிலை சேதம் .. இந்தியா கண்டனம்..!

மகாத்மா காந்தியின் 74 ஆவது நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் டேவிஸ் நகரத்தின் மத்திய பூங்காவில் மகாத்மா காந்தியின் 294 கிலோ வெண்கல சிலையை அடையாளம் தெரியாத நபர்களால் சூறையாடப்பட்டது.
காந்தி சிலையை சேதப்படுத்திய நபர்கள் குறித்து கலிபோர்னியா மாகாண காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காந்தி நினைவு நாளான இன்று காந்தி சிலை சேதமடைந்து உள்ளதால் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்து இந்தியா, வெறுக்கத்தக்க இது போன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்திய தரப்பில் அறிவுறுத்தல். இந்த சிலை இந்தியாவால் டேவிஸ் நகரத்திற்குகடந்த 2016 ஆம் ஆண்டில் பரிசாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025