ஹிட்லரின் புகைப்படங்களை மொபைலில் பகிர்ந்ததற்காக 29 ஜெர்மன் போலீசார் பணியிடை நீக்கம்!

Default Image

ஹிட்லரின் புகைப்படங்களை மொபைலில் பகிர்ந்ததற்காக 29 ஜெர்மன் போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அடால்ஃப் ஹிட்லர் அவர்களின் படங்களை எரிவாயு அறையிலுள்ள அகதிகளின் மொபைல் போன்களில் இருந்து பகிர்ந்ததற்காக ஜெர்மனியில் உள்ள 29 போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜெர்மன் அரசியலமைப்பை மீறக்கூடிய நாஜி சின்னங்கள் போன்ற தீவிரவாத உள்ளடக்கமும் பகிரப்பட்டுள்ளது, இந்த சம்பவம் ஜெர்மன் காவல்துறையினருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது எனவும் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டாம் உலகப்போரில் மில்லியன் கணக்கான யூதர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கான விழிப்புணர்வு குறித்த பிரச்சினைகளும் தற்போது எழுந்துள்ள நிலையில், இந்த 29 காவல்துறையினர் செய்துள்ள செயல் NRW போலீசாருக்கு பெரும் அவமானத்தை கொடுக்கிறது என NRW உள்துறை மந்திரி ஹாப்பர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்