‘ஜி.எஸ்.டியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைப்போம்…
2019ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது ஜி.எஸ்.டி வரியை விகிதத்தை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைப்போம் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறினார்.வரும் குஜராத் தேர்தலையொட்டி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரசாரத்தைத் துவங்கிய ராகுல் காந்திநகரில் ஒரு கூட்டத்தில் பேசும்போது இவ்வாறு கூறியுள்ளார்.